தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் இலவசமாக கோதுமை வழங்கப்படுகிறது. அதன்படி சென்னையில் வசிப்பவருக்கு வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக 10 கிலோ கோதுமையும், மற்ற நகரங்களில் வசிப்போர் 5 கிலோ கோதுமையையும் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் நியாய விலை கடைகளில் விநியோகம் செய்ய மாதந்தோறும் மூன்று கோடி கிலோ கோதுமை தேவைப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கான கோதுமை மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படுகிறது. சமீப காலமாக மத்திய தொகுப்பில் ஒதுக்கப்படும் கோதுமையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தல 3 கிலோ வரை மட்டுமே கோதுமை வழங்குமாறு நியாய விலை கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது நியாய விலை கடைகளில் கோதுமை வழங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நியாயவிலை கடைகளில் போதிய கோதுமை கையிருப்பு இல்லை என நியாய விலை கடை ஊழியர்கள் தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழக முழுவதும் நியாய விலை கடைகளில் கோதுமை தட்டுப்பாடு உள்ளதும் தெரியவந்துள்ளது.