திருமணத்தில் தாலி கட்டியவுடன் மணமேடையிலேயே உயிரிழந்த மணப்பெண்! உடனே இறுதிச்சடங்கு


இந்தியாவில் திருமணம் முடிந்து மண மேடையிலேயே மணப்பெண் உயிர் பிரிந்த விவகாரம் குறித்து குடும்பத்தார் பொலிசுக்கு தெரிவிக்காமல் இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர்.

மயங்கிய மணப்பெண்

உத்தர பிரதேசத்தில் உள்ள மஹிலாபாத் பாத்வனா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால் சர்மா. இவரது மகள் ஷிவாங்கி சர்மா (21). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து திருமண நாளும் வந்துள்ளது.

மணமகனும், மணமகளும் மாலைகளை மாற்றி கொண்ட நிலையில் ஷிவாங்கிக்கு மணமகன் தாலி கட்டினார். பின்னர் புகைப்படம் எடுப்பதற்காக நின்றுகொண்டிருந்தபோது திடீரென மணப்பெண் ஷிவாங்கி சர்மா மயங்கி விழுந்துள்ளார்.

திருமணத்தில் தாலி கட்டியவுடன் மணமேடையிலேயே உயிரிழந்த மணப்பெண்! உடனே இறுதிச்சடங்கு | Bride Dies In Wedding Police Investigation

opindia

பொலிசாருக்கு தகவல் தெரிவிக்காமல்

இதனால் திருமண விழாவுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் உறவினர்கள் மணப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் மணப்பெண் இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

அவர் இறப்பிற்கு காரணம் மாரடைப்பு என மருத்துவர்கள் கூறினர்.
இது குறித்து, பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் ஷிவாங்கிக்கு இறுதி சடங்கு நடத்தியுள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல்றிந்த பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனிடையில் ஷிவாங்கிக்கு 15 நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டது.
பின்னர் குணமான நிலையில் மீண்டும் திருமணத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.