தமிழ் சினிமாவில் இன்றைய காலக்கட்டத்தில் இரு துருவங்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். சில வருடங்களுக்கு பிறகு இருவரின் படங்களும் மோதிக்கொள்ளும் தருணம் தற்போது நிகழ்ந்துள்ளது. வரும் பொங்கல் அன்று அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இருபடங்களும் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இவ்விருவரின் ரசிகர்களும் இது பற்றி தற்போதே சமூக வலைத்தளங்களில் மோதலில் உள்ளன.
வாரிசு படத்தில் ஷாமின் கதாப்பாத்திரம்
ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் வாரிசு படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்துள்ளதாகவும், இதில் இருவருக்குள் சண்டை காட்சிகளும் இருப்பதாகவும் ஷாம் பகிர்ந்துள்ளார். குஷி படத்திற்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றுவது நெகிழ்ச்சியான தருணம் என்றார்.
துணிவுக்கு bye சொன்ன ஷாம்.
இதற்கு இடையில் வாரிசு படத்தில் நடித்திருக்கும் ஷாம், ‘துணிவு படத்தின் வில்லனாக என்னை அஜித் சார் கேட்டார்’. நான் அதற்கு முன்பே வாரிசு படத்திற்கு டேட் கொடுத்துவிட்டேன். இரு ஷூட்டிங் ஒரே சமயத்தில் வந்ததால் என்னால் அஜித்துடன் நடிக்க முடிய வில்லை என்று கூறியுள்ளார்.