கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிய சிறப்பு தொகுப்பிற்கு சப்ளை செய்த நிறுவனங்களில், கடந்த 23ஆம் தேதி அதிரடி சோதனை நடைபெற்றது.
இந்த சோதனைகள் கணக்கில் காட்டப்படாத 290 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்ட உள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அருணாச்சலா இம்பேக்ஸ் நிறுவனத்தில் மட்டும் கணக்கில் வராத 60 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து முழுமையான விவரங்களுடன் வருமானவரித்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த இருபத்தி மூன்றாம் தேதி தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்களாக தமிழகத்தின் முக்கியமான 5 நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனைகள் சுமார் கணக்கில் வர காட்டப்படாத 290 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுவிநியோகத் திட்டத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்த ஐந்து நிறுவனங்களில் தான் வருமானவரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.