ஓபிஎஸ் மகனுக்கு பரிவட்டம்; பூசாரி வேட்டியை உருவிய திமுக!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில், மலைமேல் கைலாசநாதர் உடனுறை பெரியநாயகி திருக்கோவில் அமைந்துள்ளது. சிவபெருமானின் வழிபாட்டுத்தலம் என்பதாலும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்ததாக இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அதே போன்று திருவண்ணாமலை கிரிவலம் போன்று கைலாசநாதர் கோவிலில் கிரிவலம் சென்றாலும், சிவனின் அருளாசி கிடைக்கும் என்பது பக்தர்கள் ஐதீகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கைலாசநாதர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மற்றும் நூற்றாண்டு பழமையான இக்கோயில் முன்னாள் முதல்வர்

குடும்பத்தினரின் முயற்சியால் கடந்த 2012ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆண்டு தோறும் திருக்கார்த்திகை அன்று ஓ.பன்னீர்செல்வம் அல்லது அவரது குடும்பத்தினர் தான் தீபம் ஏற்றி வந்தனர். அந்தவகையில்

மகன் இந்த ஆண்டு வழக்கம்போல் தீபம் ஏற்ற தயாராக இருந்தார்.

இந்நிலையில்தான் திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் பெண் செயல் அலுவலர் மூலம் தீபம் ஏற்றி வைக்க மேடையேறினர்.

அப்போது, ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப்புக்கு பரிவட்டம் கட்டப்பட்ட நிலையில் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கோயில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்டபோது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கும் பூசாரிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முடிவில் ஜெய பிரதீப் கையில் இருந்த விளக்கை கோயில் பூசாரி பெற்றுக்கொண்டு கார்த்திகை தீபத்தை ஏற்றினார்.

அதே நேரம் ஜெய பிரதீப் கொண்டு வந்த தீபத்தை அர்ச்சகர் முதலில் ஏற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது வேட்டியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே மேடையில் இருந்து கீழே இறங்கிய தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் எம்எல்‌ஏ சரவணக்குமார் அங்கிருந்து ஆவேசத்துடன் கிளம்பி சென்றனர். இதன் பின்னர் வழக்கம்போல தீப்பந்தம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டன.

இதையடுத்து கோயில் மேடை முன்பு வந்த ஓ.பி.எஸ் மகன் ஜெய பிரதீப் ஆன்மிக தளத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இது போன்று செயல்பட்டவர்களை தெய்வம் பார்த்துக்கொள்ளட்டும் என, ஆவேசத்துடன் பேசினார்.

திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தால் கைலாசநாதர் கோயிலில் ஏற்ற வேண்டிய கார்த்திகை தீபம் கால தாமதமாக 7 மணிக்கு ஏற்றப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதன் பின்னர், இரவு கைலாசநாதர் கோயிலுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் கார்த்திகை தீப கொப்பரையில் ஒரு குடம் நெய் ஊற்றி வழிபட்டு, சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.