சீன அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீனாவுடன் வரலாற்று ரீதியான உறவு உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு முன்னர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பு முக்கியமானதாக அமைந்தது என்று சவுதி இளவரசர் பைசல் பின் ஃபர்கான் தெரிவித்தார். ஆனால், இந்தப் பயணம் குறித்து சீனா தரப்பில் கருத்து தெரிவிக்கப்படவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் இறுதியில் பத்திரிகையாளர் கஷோகி மரணம் குறித்து ஜோ பைடன் கருத்து தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவும், கச்சா எண்ணெய் விவகாரம் காரணமாகவும் அமெரிக்கா – சவுதி உறவில் சற்று விரிசல் நீடிக்கிறது. சீனாவுக்கும் – அமெரிக்காவுக்கு இடையேயும் வர்த்தகம் சார்ந்து நீண்ட காலமாக பனிப்போர் நிகழ்கிறது.
இந்தநிலையில் சீன அதிபர் சவுதிக்கு இன்று பயணம் செய்ய உள்ளார் என்பது, உலகளவில் பேசு பொருளாகியுள்ளது. சீனா தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்த பயணம், தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் 3 நாள் பயணமாக சவுதிக்கு இன்று செல்கிறார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சீன அதிபரின் 3 வது வெளிநாட்டு பயணமான, இதில் சுமார் 30 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகம் தொடர்பான ஒப்பத்தங்கள் கையெழுத்து செய்யப்பட உள்ளதாக சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
எண்ணெய்க்கான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் வேண்டுகோளை நிராகரித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சவுதி அரேபியா சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது குறிப்பிடதக்கது. எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் நிகழ்ச்சி நிரலில் முதலிடம் வகிக்கும் என கூறப்பட்டுள்ளது,
திராவிட மாடல் – அனைவருக்கும் சமம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
இந்த உச்சிமாநாடாந்து சீனாவிற்கும், சவுதிக்கும் இடையே ஆழமான உறவுகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அமையும் என கூறப்படுகிறது. இது அமெரிக்கா சவூதி இடையேயான உறவுகள் எவ்வளவு தூரம் விரிசல் அடைந்துள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சவுதி அரேபியாவின் எண்ணெய்யை வாங்கும் முதன்மையான நாடாக அமெரிக்க விளங்கியது.
இருமல் சிரப் குடித்த 200 குழந்தைகள் உயிரிழப்பு; இந்தோனேசியாவில் மேலும் ஒரு பூகம்பம்.!
அமெரிக்காவின் மிகச்சிறந்த நட்பு நாடாக சவுதி விளங்கியது. இந்தநிலையில் நாடாக ரஷ்யா- உக்ரைன் போரில் சவுதி அரேபியா ரஷ்யாவிற்கு மறைமுகமாக உதவுவததாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டினார். அதுமுதல் சவுதி – அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிக்க ஆசிய நாடான சீனா பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த மாபெரும் நகர்வு கருதப்படுகிறது.