சென்னை காந்தி மண்டபம் திறந்தவெளியில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டணத்துடன் அனுமதி! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை காந்தி மண்டபம் திறந்தவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த  கட்டணத்துடன் கூடிய அனுமதி வழங்குவதாக  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதற்கான கட்டணத் தொகையையும் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னையில் கிண்டி காந்தி மண்டபம்  வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் பல்கலைக்கழக விழாக்கள் பட்ட மளிப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகள், அரிமா சங்க நிகழ்ச்சிகள், சுழற் சங்க நிகழ்ச்சிகள், பள்ளிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், காந்திய நிறுவனங்களுக்கான இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  • பல்கலைக்கழக விழாக்கள் பட்டமளிப்பு மற்றும் பிற நிகழ்வுகள் நடந்த ரூ.17,500 வாடகையாக நிர்ணயம்.
  • கல்லூரி நிகழ்ச்சிகள், அரிமா சங்கம், சுழற் சங்கம், (மதச்சார்பற்றவை) போன்ற நிகழ்ச்சிகளுக்கு .17,500 வாடகை நிர்ணயம்.
  • பள்ளிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு குறைந்த வாடகை ரூ.12,500 என வாடகை நிர்ணயம்.
  • காந்திய நிறுவனங்களுக்கான, காந்திய கல்விக்கான இளைஞர் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.6,000 வாடகை நிர்ணயம்.

அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு, நிகழ்ச்சி நடத்துபவர்கள், காந்தி மண்டபம் திறந்த வெளி அரங்கத்தினை பயன்படுத்திக் கொள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், இராஜாஜி மண்டபம், சென்னை-2 என்ற முகவரியிலும், 9498042415 என்ற என்னிலும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.