டிச. 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை மதியம் அல்லது இரவு நேரம் மழை பெய்ய தொடங்கும். மாமல்லபுரம் – பழவேற்காடு இடையே 10ம் தேதி காலை புயல் கரையை கடக்கும். கரையை நெருங்கும் போது புயலின் மையப் பகுதி சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.