நாமக்கல் : பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு பணம் கேட்டு தாமதப்படுத்தியதால், தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக இராமாயி என்று பெண் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராமாயி என்ற பெண் நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பிரசவத்திற்கு பணம் கேட்டு உள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை தர தாமதப்படுத்தியதால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பிரசவம் நடைபெற்ற நிலையில், குழந்தை இறந்து பிறந்தது. இந்நிலையில், பிலிக்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்து இராமாயி புகார் அளித்துள்ளார்.
அதில், பிரசவத்திற்கு பணம் கேட்டு தாமதப்படுத்தியதால், தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக இராமாயி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இராமாயின் புகாரின் பேரில் நாமக்கல் மருத்துவத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.