ராஜாஜி நகர் : பிரபல மோதி கண் மருத்துவமனை திடீரென மூடப்பட்டதால், நோயாளிகள், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
பெங்களூரு ராஜாஜி நகரின் வெஸ்ட் ஆப் காட் சாலையில் டாக்டர் எம்.சி.மோதி கண் மருத்துவமனை 1947 முதல் செயல்பட்டு வந்தது.
அரசு நிலம் வழங்கிய பின், 1980 முதல் விஸ்தரிக்கப்பட்டு பெரிய அளவில் செயல்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கண் சிகிச்சை பெறுகின்றனர்.
மருத்துவமனை சார்பில், பாரா மருத்துவ கல்லுாரியும் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பான பிரச்னை 2014 முதல் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக திடீரென மருத்துவமனைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. நான்கு ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சிகிச்சைக்காக தினமும் பெரும்பாலான நோயாளிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்து, மருத்துவமனையை திறக்கும்படி மற்ற ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வரும் 12ம் தேதி முதல், பி.எஸ்.சி., பாரா மெடிக்கல் தேர்வு நடக்க உள்ளது. ஆனால், மாணவர்களின் ஹால் டிக்கெட்கள் மருத்துவமனையினுள் இருக்கிறது.
எனவே, போலீசார் மருத்துவமனையை திறந்து ஹால் டிக்கெட் வழங்கும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணாடி, சிகிச்சைக்காக ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கவலையில் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement