அமெரிக்க வரலாற்றில் முதல் இளம் கருப்பின மேயர்.!

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் இருந்து இயர்லே என்ற நகரத்திற்கான மேயர் தேர்தலில், இளம் வயதான கருப்பின பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் இளம் வயது கருப்பின மேயர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெய்லன் ஸ்மித் என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நகரின் சாலை மற்றும் துப்புரவு சூப்பிரெண்டாக உள்ள நெமி மேத்யூஸ் என்பவரை வீழ்த்தி ஸ்மித் வென்றுள்ளார். ஸ்மித்துக்கு 18 வயதே ஆகிறது.

இதனால், அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு பின்னர் தனது பேஸ்புக்கில் ஸ்மித் வெளியிட்ட செய்தியில், நகரில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எனது முக்கிய பணியாக இருக்கும். இயர்லே நகரின் சிறந்த அத்தியாயம் கட்டமைக்கும் தருணம் இது. எனது தாயாரால் அழுகையை நிறுத்த முடியவில்லை. தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநில தேர்தலில் பாஜக முன்னிலை; காஞ்சிபுரம் பாஜகவினர் கொண்டாட்டம்!

இந்த ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்த அவர், பொது பாதுகாப்பு, கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை மீட்டெடுப்பது அல்லது நீக்குவது மற்றும் அவசரகாலத்திற்கு தயாராகும் புதிய திட்டங்களை அமல்படுத்துவது போன்ற விசயங்களை முன்னிலைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்தியா என்னில் ஒரு பகுதி: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி!

மேலும் அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் மாணவர்கள் அளவிலான பல்வேறு தலைமை பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் மேயர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர் 139 வாக்குகளை பெற்ற நிலையில், ஸ்மித் 218 வாக்குகளை பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.