2022 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையிலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சுமார் 2300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வழக்கமாக நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவற்றில் இலஞ்ச ஊழல் விசாரணைச் சட்டம் தொடர்பான முறைப்பாடுகள் மாத்திரமே விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. மேலும், ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்ற தெளிவற்ற முறைப்பாடுகளை ஆணைக்குழு விசாரணைக்கு எடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள் தொடர்பாக மற்றும் அரசாங்க அதிகாரி ஒருவரை பணயக் கைதியாக பிடித்து இலஞ்சம் வாங்கத் தயாராக இருக்கும் சந்தர்ப்பங்களில், ஆணைக்குழு தலையிட்டு, விசாரணைகளை மேற்கொள்ளும், இது தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து ‘1954’ என்ற எண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு தகவல்களை வழங்க முடியும் என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.