எனக்கு மருத்துவருடன் திருமணம், பின்னர் தொழிலதிபருடன்..மனம் திறந்த நடிகை தமன்னா


திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.


17 ஆண்டுகால சினிமா

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா, அடுத்த ஆண்டே தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை தமன்னா திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியானது.

தமன்னா/Tamannaah

திருமணம் குறித்த செய்திக்கு மறுப்பு

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமன்னா, தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘நான் திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு சினிமாவில் நீடிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற வித்தியாசம் பார்க்காமல் யாரோடும் சேர்ந்து நடிக்க தயார்.

எனது கதாபாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மட்டுமே பார்க்கிறேன். சகஜமாகவே பெண்களுக்கு திருமண வயது வந்தவுடன் எல்லோரும் திருமணத்தைப் பற்றி கேட்பார்கள்.

தமன்னா/Tamannaah

எங்கள் வீட்டில் கூட என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்கள். வரன் கூட தேடுகிறார்கள். ஆனால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘என் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

ஏற்கனவே எனக்கு ஒரு மருத்துவருடன் திருமணம் செய்து வைத்தார்கள்.

இப்போது ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்கிறார்கள். அந்த நேரம் வரும்போது நானே சொல்கிறேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

தமன்னா/Tamannaah

    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.