ஓடிடியில் வெளியாகும் ரகுல் ப்ரீத் சிங் படம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத்தி சிங், சோலோ ஹீரோயினாக நடித்துள்ள ஹிந்தி படம் சத்ரிவாலி. ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கத்தில் உருவாகி உள்ளது.

இந்த படம் அடல்ட் கண்டென்ட் படம். இதில் ரகுல் ப்ரீத்தி சிங் காண்டம் பரிசோதகராக நடித்துள்ளார். அதாவது காண்டம் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதன் தர பரிசோதகராக நடித்துள்ளார். காண்டம் பரிசோதகர் வேலைக்கு சேரும் ரகுல் ப்ரீத் சிங், ஆரம்பத்தில் கூச்சப்பட்டு தயங்கியபடி இருக்கும் நிலையில், பின்னர் அதன் அவசியம் மற்றும் தேவையை புரிந்து கொண்டு எப்படி மக்களுக்கு செக்ஸ் எஜுகேஷனில் விழிப்புணர்வு கொடுக்கிறார் என்பதை காமெடியாக சொல்லி இருக்கும் படம் . இந்த படம் நேரடியாக ஜி5 ஓடிடியில் வருகிற ஜனவரி 5ம் தேதி வெளிவருவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரகுல், தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த அயலான் படமும் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு படங்களும் வெளியாக தாமதம் ஆன நிலையில், இந்த படம் வெளிவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.