தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு (23:30 மணியளவில்) புயலாக (‘மான்டஸ்’) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும் தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ரு முதல் இரு நாட்களுக்கு, அதாவது 10ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை முன்கணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாண்டூஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால், தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி காரணமாக இன்று காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட பள்ளிகளுக்கு விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்பொழுது கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட மேயர் தலைமையில் மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும் வருகிற 10 ஆம் தேதி வரை இதே போல கனமழை அதிகமாக பேசக்கூடும் சென்னை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்க கோரி தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.