கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில அரசே நடத்தும் 27வது சர்வதேச திரைப்பட விழா நாளை (டிச.,9) கோலாகலமாக துவங்கி டிச.,16 வரை நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் இந்தாண்டு விழா கூடுதலாக களைகட்டும்.
அகில இந்திய அளவில் கோவாவிற்கு அடுத்து திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு உலகளவில் உள்ள திரை கலைஞர்களும், ரசிகர்களும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பர். தமிழ், மலையாளம் உட்பட பல மொழி திரைப்பட வல்லுனர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்பர். வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் பிரபல சர்வதேச இயக்குனர்களின் படங்களும் திருவனந்தபுரம் விழாவில் திரையிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திரைப்பட விழாவிற்கு திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் வருவதால் கேரளாவிற்கு வந்து போகும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
டிச., 9 மாலை 3:30 மணிக்கு திருவனந்தபுரம் நிஷாகாந்தி அரங்கில் துவக்க விழாநடக்கிறது. அன்று இரவு இந்தியன் பிரிமீயர் பிரிவில் ‘டோரி அண்ட் லோகிட்டா’ பிரான்ஸ், ஸ்பெஷல் பிரிவில் ஓரிடத்துாரு பயல்வான்’ மலையாளம், சர்வ தேச பிரிவில் உட்டாமா’ ஸ்பேனிஷ், ‘டக் ஆப் வார்’ ஆங்கிலம், இந்திய பிரிவில் ‘தி ஸ்டோரி டெல்லர்’ ஹிந்தி, ‘ஜாகி’ பஞ்சாபி, உலக பிரிவில் ‘ஷேர்’ ரஷ்யன், ‘தி கேம்’ ஹங்கேரியன் உட்பட 350க்கும் மேற்பட்ட பலமொழி திரைப்படங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.
திரைப்பட விழா, திரைப்படங்களை காண வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள், ரசிகர்கள் வருவர். கேரள அரசின் சலசித்ரா அகாடமி, கலாச்சார துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement