சென்னை: நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, மின்கலங்கள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.