கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வை எழுதி உதவித் தொகை பெறலாம். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தநிலையில் நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 10தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் ஹால் டிக்கெட்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அவற்றை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அதில் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும்.
இதுதவிர ஹால் டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பமிட வேண்டும். இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பள்ளி மாணவர்களுக்கா ஊரக திறனாய்வு தேர்வு, மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்று, இந்திய நிலப்பரப்பை நெருங்கி வருகிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள மாண்டூஸ் புயல், மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இப்புயல், சூறாவளியாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை இரவு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவிகள் – இன்ப அதிர்ச்சி கொடுத்த செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர்.
அதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் இன்று (64.5 மி.மீ.-204 மி.மீ.) கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். தென் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவை ஒட்டியுள்ள பகுதிகளில் 64.5 மிமீ-115.5 மிமீ கனமழை கொட்டி தீர்க்கும். அதேபோல் நாளை ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் கடலோர பகுதிகளில் 204 மிமீக்கு மேல் மிகக் கனமழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஊரக திறனாய்வு தேர்வை தள்ளி வைத்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வருகிற 10ம் தேதி சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு (Trust examinations) புயல் மற்றும் கனமழை காரணமாக அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 17ம் தேதி அடுத்த வார சனிக்கிழமை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.