8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இது, நாளை (டிச. 9-ம் தேதி) காலை வரை தீவிர புயலாக இருக்கும்.

அதன்பின் படிப்படியாக வலுப்பெறும். இந்தப் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவிலும், கரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

தொடர்ந்து இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புயலை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேடை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.9-ம் தேதி) விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேடை, கடலூர் மாவட்ட கலெக்டர்கள் நாளை (டிச.9-ம் தேதி) தங்கள் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.