
மாண்டஸ் புயல் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, மின்கலங்கள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக பருவமுறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

- மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று அரசு பேருந்துகள் இயக்கப்படாது. பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டது.
- தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் நிற்பதை மக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- பொதுமக்கள் அவசர உதவி, புகார்களை தெரிவிக்க 1913- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
- காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகாமையில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
- சென்னை மக்கள் அவசர தேவைக்கான உதவி எண்கள் – 1913, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 9445477205.