
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக்கூடும் எனவும் இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாண்டஸ் புயல் காரணமாக அரியலூர், தஞ்சாவூர்,பெரம்பலூர்,திருவாரூர்.மயிலாடுதுறை,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை,சேலம் மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.