வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாவதும், இதன் விளைவாக தமிழகத்தின் கடலோர மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்ப்பதுடன், புயலால் பலத்த சேதம் ஏற்படுவதும் வழக்கம்.
புயல் சின்னம் உருவாகும் காலத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, வானிலை ஆய்வு மையம், அன்றாடம் வழக்கமாக தரும் வானிலை நிலவர அப்டேட்டுடன், அவ்வபோது கூடுதல் அப்டேட் அளிப்பதும் வழக்கம். வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது உள்ளிட்ட முடிவுகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்கும். இந்த விதத்தில் பருவமழை காலத்தில் வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட் அரசு நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் வெதர் அப்டேட் ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்புடும் பிரதீப் ஜான் என்ன சொல்கிறார் என்று பொதுமக்கள் ஆர்வமுடன் பார்க்கும் அளவுக்கு அவரது வெதர் அப்டேட் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. பொதுமக்களின் இந்த மனஓட்டத்தை புரிந்து, வெதர்மேனும் பருவமழை காலங்களில் தவறாமல் வானிலை நிலவரம் குறித்து தமது பாரவையில் எச்சரிக்கை, அறிவுறுத்தல்களை அளித்து வருகிறார்.
மாண்ட்ஸ் புயல் குறித்தும் தற்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “மாண்டஸ் புயல், சூறாவளி வடக்கில் முகடுகளுடன் நன்றாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வறண்ட காற்று மற்றும் காற்றாலை குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தெற்கில் இருந்து ஈரப்பதம் தொடர்வதால் அதிக மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில் வட தமிழகத்திற்கு நாளை ஒரு பெரிய நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகளைக் குறைத்து, இயற்கை நமக்காக திட்டமிட்டதை அனுபவிப்போம்” என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாண்டஸ் புயல் குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று முன்தினம் அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர்,கவ்வும் இடம் – வட தமிழக கடலோரப் பகுதி (கடலூருக்கும் புலிகேட்டிற்கும் இடையில்)
மழைப்பொழிவு இடங்கள் – நாகை டூ வட தமிழகம் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு) டூ நெல்லூர்
மழை புஸ்ஸாகும் வாய்ப்பு – 1 முதல் 10 சதவீதம்
வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் வாய்ப்பு – 80 முதல் 90 சதவீதம்
காற்றின் வேகம் – ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டூ உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் (மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர்)
டெல்டா – மாண்டஸ் புயல் டெல்டாவிலும் கரையை கடக்க வாய்ப்புள்ளது
புயல் பாதிப்பு ஏற்படும் தேதி – 8 முதல் 11ஆம் தேதி வரை
ஸ்கூல் லீவு வாய்ப்பு – 8 முதல் 11 வரை (ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை) என்று பதிவிட்டிருந்தார்.