அதிர்ச்சி… ரேசன் அரிசியில் எலி குஞ்சுகள்… புலம்பும் பொதுமக்கள்

பொது விநியோக திட்டம் என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் இருந்து நடுத்தர வர்க்கத்தினர் முதல் பலனிக்கக்கூடியது. அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு என பல்வேறு அத்தியாவசிய பொருள்களை நியாய விலைக்கடைகள் மூலம் மக்கள் பெற்றுகொள்கின்றனர்.   

அந்த வகையில், தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் நியாய விலை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நியாய விலைகடைக்கு பாலசமுத்திரம், கல்லுப்பட்டி, பந்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாலசமுத்திரத்தில் உள்ள நியாய விலை கடையில்தான் பொருட்கள் வாங்குவார்கள்.

இந்த நியாய விலை கடையில் நேற்று (டிச . 11) காலை ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு  வந்த  பாலசமுத்திரத்தை சேர்ந்த முருகன் மகன் மோகன், ரேசன் அரிசி வாங்கியுள்ளார். அப்போது அந்த  ரேசன் அரிசி வாங்கிய மோகனின் பையில் ஐந்துக்கும் மேற்பட்ட எலி குஞ்சுகள் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

வாடிக்கையாளர் மோகன் அந்த ரேசன் அரிசியை  கடை முன்பாக கொட்டி ரேசன் கடை விநியோகஸ்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அப்போது மோகனுடன் சேர்ந்து ஊர்மக்களும் அவர்களிடம் முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசியில் இவ்வாறு எலிகுஞ்சுகள் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். ரேசன் கடைகளை முறையாக பராமரிக்காததாலும், சுகாரதாரமற்ற வகையில் வைத்திருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.