இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது

மும்பை,

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.

மும்பையில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

மும்பை டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.