குஜராத்தில் வச்சு விஷயத்தை முடிக்கும் ஓபிஎஸ்… பதவியேற்பும், அதிமுகவில் தீயான சம்பவமும்!

அதிமுகவில் சலசலப்புகள் ஓய்ந்த பாடில்லை. இதில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால நிவாரணம் பெறும் வகையில் உச்ச நீதிமன்றத்தில்

தாக்கல் எய்த புதிய மனு தான். அதில் அதிமுக பொதுக் குழு வழக்கிற்கும், அதிமுக விதிகளில் திருத்தம் செய்து பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு மீது நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. இதில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். எப்படியும் ஒரு இறுதி முடிவு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் நாளை (டிசம்பர் 12) நடைபெறும் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவில் பங்கேற்க

இன்று மாலை விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

சமீபத்தில் 2023 இந்தியாவில் நடைபெறும் ஜி-20 தலைவர்கள் மாநாட்டை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து மாநில முதல்வர்கள், முக்கிய கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் விசிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்காக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனுப்பிய கடிதத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டி மத்திய அரசு தங்கள் தரப்பை அதிகாரப்பூர்வ அதிமுகவாக கருதுகிறது என்று எடப்பாடி தரப்பு மார்தட்டிக் கொண்டது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அதிர்ச்சி அடையச் செய்ய உடனே மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது துரதிஷ்டவசமானது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக தன்னுடைய பதவியே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றும், எடப்பாடி பழனிசாமி பதவி அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரானதும் என்றும் குறிப்பிட்டிருந்தார். எதிர்காலத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிடுவதை தவிர்ப்பீர்கள் என நம்புவதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் குஜராத் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அங்கு பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்கு விழாவில் பிரதமர் மோடி, உள்துரை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதுதான் சரியான வாய்ப்பு. அதிமுகவில் நீடிக்கும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் சில விஷயங்களை பாஜக தலைமைக்கு ஓபிஎஸ் தெரியப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெறுமனே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பி வரும் நிகழ்வாக மட்டும் இருக்காது.

அதிமுகவில் தனக்கான இடத்தை உறுதி செய்யுங்கள் என்று வலியுறுத்த வாய்ப்புண்டு. அப்படியே உச்ச நீதிமன்ற வழக்கு, தேர்தல் ஆணைய அங்கீகார விஷயம் ஆகியவை குறித்து சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாளை ஓபிஎஸ் சந்திப்பு ஒருபுறம், பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணை மறுபுறம் என அதிமுகவிற்கு மிக முக்கிய நாளாக அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.