ஐதராபாத்: ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2, மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இதில் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனை அடுத்து ராஜமவுலி இயக்கி இருக்கும் அடுத்த படத்துக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் படத்தைதான் ராஜமவுலி இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அமேசான் காடுகளில் படமாகும் இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பில் சர்வதேச நிறுவனங்களான குளோபல் ஸ்டுடியோ மற்றும் டிஸ்னி ஆகியவை இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.