நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

வடிவேலு தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞன். பல ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வடிவேலு சில பிரச்னைகளால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஒருவழியாக அவருக்குரிய பஞ்சாயத்துக்கள் அனைத்து முடிந்ததை அடுத்து மீண்டும் வைகை புயல் களமிறங்கியிருக்கிறது. அந்தவகையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர் ஜிவி பிரகாஷின் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவை மீண்டும் திரையில் காணவிருப்பதை நினைத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் காமெடி, குணச்சித்திரம் மட்டுமின்றி ஹீரோவாகவும் களமிறங்குகிறார் வடிவேலு. அந்தவகையில், தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை வடிவேலுவிடமிருந்து வாங்கிய சுராஜ் வடிவேலுவை வைத்து “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தை இயக்கியிருக்கிறார்.  நாய் சேகர் படத்தில் நாய்களை திருடி விற்பனை செய்பவராக வடிவேலு நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஆனந்த் ராஜ், ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் நேற்றைய தினம் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை குவித்து வருகிறது. மேலும் படத்தில் காமெடி எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மீண்டும் வைகை புயல்... நாய் சேகர் வடிவேலு டிசம்பரில் ரிட்டர்ன்ஸ்

இந்த நிலையில் தற்போது படம் வெளியான முதல் நாளில் ரூ.1 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயலால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.