நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி தீவிரம் பறவைகள் தொல்லையை தடுக்க விவசாயிகள் நூதன முயற்சி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பிசான பருவ நெல் சாகுபடி தீவிரமான நடந்து வரும் நிலையில் முளைக்கும்  விதைகளை பறவைகள் சூறையாட வருகின்றன. இதனால்  பறவைகளிடம் இருந்து வளரும் நாற்றுகளை காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு நூதன  வழிகளை கையாள்கின்றனர்.நெல்லை மாவட்டத்தில்  நடப்பு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பெய்து வருகிறது.  இதனால் பிரதான அணைகள் நீர் இருப்பு நிரம்பாமல் உள்ளது. இந்த சீசனில்  பாபநாசம் அணை 100 அடியை கூட எட்டமுடியாமல் உள்ளது.

இந்நிலையில் அனைத்து கால்வாய்களிலும் கடந்த சில வாரங்களாக பிசான பருவ  பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு செல்கிறது. இதனால் பெரும்பாலான  விவசாயிகள் பாசனப்பணிகளை தொடங்கியுள்ளனர். நெல்லை மாநகரில் சில பகுதிகளில்  விவசாயிகள் மழை அளவை கருத்தில் கொண்டு இன்னும் பணிகளை தொடங்காமல்  தயக்கத்துடன் உள்ளனர். இதனிடையே நெல் விதைத்த பகுதிகளில் நாற்று வளரும்  பருவத்தில் பறவைகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பறவைகளிடம் இருந்து வளரும் நாற்றை காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு  நூதன வழிமுறைகளை கையாளுகின்றனர்.

முன்னர் நிலத்தின் மையத்தில் பரன்  அமைத்து கவன் கல் வீசீயும், ஆலோலம் பாடல் பாடியும் பறவைகளை வயலுக்குள்  வரவிடாமல் தடுப்பார்கள். தற்போது நிலத்தில்  சிறிய கம்புகளை ஊன்றி அதில் பிளாஸ்டிக் கவர்களை கொடி போல் கட்டி யுள்ளனர்.  மேலும் பலர் சேலைகளை போர்வை போல் போர்த்தியும், நிலத் தை சுற்றியும்  கட்டிவைத்துள்ளனர். இதனால் அந்தப்பகுதிகளில் பறவைகள் முகாமிடுவது  குறைந்துள்ளது.மேலும் பகல் நேரங்களில் விவசாயிகள் நிலம் பகுதியில் முகாமிட்டு பறவைகளை விரட்டுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.