பாலாவின் சம்பள விவகாரம் ; ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி வைத்த உன்னி முகுந்தன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த ஷபீக்கிண்டே சந்தோஷம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை உன்னி முகுந்தனே தயாரித்து இருந்தார். இந்த படத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் தமிழ் நடிகருமான பாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் உன்னி முகுந்தன் தனக்கு பேசியபடி சம்பளத்தொகை கொடுக்கவில்லை என்றும், தனக்கு மட்டும் அல்ல இன்னும் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்றும் பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டினார் பாலா. மேலும் பெண் கலைஞர்களுக்கு மட்டும் சம்பளம் செட்டில் செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த பேட்டி மலையாள திரையுலகில் பரபரப்பை கிளப்பியது.

இதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த உன்னி முகுந்தன் படத்தில் பணியாற்றியவர்களுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்கப்பட்டதை வங்கிக் கணக்கு ஆதாரங்களுடன் விளக்கினார். மேலும் நடிகர் பாலாவிற்கு இந்த படத்தில் நடிக்க நாளொன்றுக்கு 10 ஆயிரம் வீதம் 20 நாட்களுக்கு இரண்டு லட்சம் சம்பளம் பேசப்பட்டு முழுவதும் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கூறிய உன்னி முகுந்தன், பாலா கூறியது போல சம்பளம் வழங்குவதில் யாருக்கும் எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் அனூப் பந்தளம் தனக்கு சம்பளம் முழுவதும் செட்டில் செய்யப்பட்டு விட்டதாக கூறிய நிலையில், தற்போது படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரகுமானும் இந்த விவகாரம் குறித்து கூறும்போது தனக்குரிய சம்பளமும் ஜிஎஸ்டி தொகை உட்பட ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும் சம்பளம் முழுமையாக வந்துவிட்டதா என உன்னி முகுந்தன் தானே போன் செய்து விசாரித்தார் என்றும் கூறியுள்ளார்.

இதன்மூலம் நடிகர் பாலா உன்னி முகுந்தன் மீது வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கும் விதமாக பேட்டி கொடுத்து வருவதாக ஒரு சலசலப்பு தற்போது எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.