வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்: பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்க முடியாது என நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.
ஆறாவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பிரதமர் மோடி இன்று( டிச.,11) கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து டிக்கெட் எடுத்து அந்த ரயிலில் பயணித்த மோடி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மும்பையிலிருந்து நாக்பூர் வரை 701 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.55,000 கோடி செலவில் 10 மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாக்பூர் மெட்ரோ ரயில் முதற்கட்ட திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியவதாவது: அரசியலில் குறுக்கு வழிகளை கடைப்பிடிக்கும் அரசியல் தலைவர்கள் நாட்டின் பெரிய எதிரிகள். குறுக்கு வழியில் அரசியல் செய்யும் அரசியல் தலைவர்கள் பற்றி உங்களுக்கு நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்க முடியாது. வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
டிரம்ஸ் இசைத்த பிரதமர் மோடி:
பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பின்போது டிரம்ஸ் இசைக்கப்பட்டது. இது பிரதமர் மோடியை வெகுவாக கவர்ந்தது. உடனே தானும் சிறிது நேரம் டிரம்ஸ் இசைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement