மகாத்மாவை போற்றிய மகாகவி… காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பெருமிதம்!

மகாகவி என்று போற்றப்படும் பாரதியாரின் 140 ஆவது பிறந்த நாள், தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நல்ல நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்துக்கு காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ பலராமன், தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் பி எஸ் புத்தன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ பலராமன், இலக்கிய அணி தலைவர் பி எஸ் புத்தன், மாநில செயலாளர், ஏ தனராஜி, ஓ பி சி துணைத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் உ பலராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர், அதில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக கொண்டாடுகின்றோம்.

பாரதியாரை யாருடனும் ஒப்பிட்டு பேச முடியாத கவிஞர், பாரதியாரும், பாரதி தாசனும் ஒருவர் தான். அவர்கள் இருவரையும் பிரித்து பேசக் கூடாது. பாரதியாரை சாதி, மதம், இனததின் அடிப்படையில் சிலர் பிரித்து பேசுகின்றனர். அதுபோன்று அவரை குறுகிய வட்டத்துக்கு யாரும் பிரிக்க வேண்டாம்.

நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன் தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணியின் சார்பாக பாரதியார் கவிதைகளை பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்று அவர் பிறந்த இநத நன்னாளில் கோரிக்கை வைக்கிறேன். பாரதியார், மகாத்மா காந்தி அவர்களை பற்றி, “பாரதத்தை காக்க வந்த மகாத்மா” என்ற பாடலை எழுதி உள்ளார் என்று குறிப்பிட்ட பலராமன, அந்த பாடலில் சில வரிகளை எடுத்துரைத்து பாரதியாருக்கு புகழாரம் சூ்்டினார்.

மகாத்மா காந்தியும், மகாகவி பாரதியாரும் 1919 ஆம் ஆண்டு நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர். காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி, கட்டுரை, கவிதை, கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவு செய்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் முயற்சிகளை அறிந்திருந்த காந்தி, பாரதி மறைவிற்குப் பிந்தைய காலகட்டத்தில் ‘யங் இந்தியா’, ‘நவஜீவன்’ இதழ்களில் பாரதியைப் பற்றி எழுதியிருக்கின்றார்; பாரதி பாடல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார். பாரதி பெயரைத் தம் கைப்படத் தமிழில் எழுதிப் போற்றியிருக்கிறார் என்று முனைவர் ய.மணிகண்டன் தொகுத்து வெளியிட்டுள்ள பாரதியும், காந்தியும் எனும் நூல் குறித்த அறிமுக உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் ஷியாஜி ஷிண்டே பாரதியாராக நடித்து பல ஆண்டுகளுக்கு முன் வெளியான பாரதி திரைப்படம் அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை உணர்த்தும் காலகண்ணாடியாக திகழ்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.