மரியுபோலை தாக்கும் உக்ரைனிய படைகள்: நகரம் வீழ்ந்தால்! கிரிமியாவிற்கான பாதை திறக்கும்


ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மரியுபோல் நகரின் மீது உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மரியுபோல் மீது தாக்குதல்

 உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் மாதக்கணக்கில் நடைபெற்ற தாக்குதலில் தென்கிழக்கு பகுதியான மரியுபோல் நகரம் ரஷ்ய படைகளின் கைக்குள் சென்றது.

 10 மாதங்கள் தொட்டு இருக்கும் இந்த போர் நடவடிக்கையில், ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதிகளை உக்ரைனிய படைகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான மரியுபோல் மீது உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மாஸ்கோ சார்பு அதிகாரி சனிக்கிழமை மதியம் தெரிவித்த தகவலில், உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில், இரண்டு பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதுடன், 10 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரஷ்ய படைகளால் முன்னர் கடத்தப்பட்ட நகரின் மேயர் வழங்கிய தகவலில், படையெடுப்பாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கிரிமியாவிற்கான நேரடி பாதை

இந்நிலையில் உக்ரைனின் தாக்குதல் குறித்து பேசியுள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் Oleksiy Arestovych, முக்கிய தொழில்துறை மற்றும் போக்குவரத்து மையமான உக்ரைனின் மரியுபோல் நகரம் கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது, இது தெற்கு உக்ரைனின் மிக முக்கியமான பாதுகாப்பு பகுதியாகும்.

மரியுபோலை தாக்கும் உக்ரைனிய படைகள்: நகரம் வீழ்ந்தால்! கிரிமியாவிற்கான பாதை திறக்கும் | Ukraine Attacks Occupied Melitopol Route To CrimeaUkraine-உக்ரைன்(sky news)

இது ரஷ்ய படைகளை கிழக்கு கெர்சன் பகுதியுடன் அனைத்து தந்திரோபாய வழியிலும் இணைக்கிறது, மற்றும் மரியுபோல் நகருக்கு அருகில் உள்ள ரஷ்ய எல்லைக்கு செல்லும் அனைத்து வழிகளும் அதன் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.

ஒருவேளை மரியுபோல் நகரம் முற்றிலும் வீழ்த்தப்பட்டால், கெர்சன் வரையிலான அனைத்து பாதுகாப்பு வரிசைகளும் வீழ்த்தப்படும், மேலும் உக்ரைனிய படைகள் கிரிமியாவிற்கு செல்லும் நேரடி வழி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மரியுபோலை தாக்கும் உக்ரைனிய படைகள்: நகரம் வீழ்ந்தால்! கிரிமியாவிற்கான பாதை திறக்கும் | Ukraine Attacks Occupied Melitopol Route To CrimeaUkrainian Army-உக்ரைன் ராணுவம்(Reuters) 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.