ஹைதராபாத்தை சேர்ந்த அர்மான் மாலிக், பாயல் மாலிக், கிருத்திகா மாலிக ஆகிய இரு பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். தற்போது, இணையத்தில் இவர்தான் பேசுபொருளாக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் 15 லட்சம், யூ-ட்யூபில் 20 லட்சம் பாலோயர்ஸை வைத்துள்ள அர்மான், சமீபத்தில் அவர் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவால் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதாவது, தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக கடந்த வாரம் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் இரண்டு மனைவிகளும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும், இரண்டு மனைவிகள், தனது உள்ளிட்டோருடன் புகைப்படங்களை பகிர்ந்து, ‘எனது குடும்பம்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பலரும் லைக்ஸை குவித்து வந்தாலும், சிலர் கமெண்ட்ஸ் விமர்சித்தும் வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பமடைவது எந்தவிதத்தில் சரி என்கிற ரீதியில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு கிரிக்கெட் அணியையே உங்களால் உருவாக்க முடியும் என ஒரு பயனர் அவரை பகடி செய்து பதிவிட்டிருந்தார். மேலும், இரண்டு மனைவிகள் வைத்திருப்பதை சட்டம் அனுமதிக்கிறதா என்றும் சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த பதிவிற்கு சுமார் 1.50 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.
டிக் டாக் ஸ்டாரான அர்மான் மாலிக், 2011ஆம் ஆண்டு பாயல் மாலிக்கை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சிராயு மாலிக் என்ற மகனும் உள்ளார. இதையடுத்து, 2018இல் பாயல் மாலிக்கின் நெங்கிய தோழியான கிருத்திகாவை, அர்மான் திருமணம் செய்துகொண்டார்.
ஆரம்ப கட்டத்தில், முதல் மனைவி பாயலும்கும் அர்மானுக்கும் கருத்து மோதல் இருந்ததால், சில காலம் அர்மான் – கிருத்திகா உடன் டெல்லியில் தனியாக வசித்து வந்தார். தற்போது, சமாதானம் ஏற்பட்டு நான்கு பேரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மூவர் ஜோடி தொடர்ந்து இன்ஸ்டாகிராம், யூ-ட்யூபில் வீடியோ பதிவேற்றி வருகின்றனர்.