FIFA கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. பிரான்ஸ், அர்ஜெண்டினா, பிரேசில், இங்கிலாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, குரோஷியா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறி இருந்தது.
காலிறுதி சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்திய அர்ஜெண்டினா அணியும், பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே நேற்று நடைப்பெற்ற போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டியில் போச்சுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
22-வது FIFA கால்பந்து உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுக்கல் அணி வெளியேறியதைத் தொடர்ந்து டிஃபென்டரான பெப்பேவும் , மிட்பீல்டரான ப்ருனோ பெர்னாண்டஸும் தங்கள் நாக் அவுட் போட்டிக்கு ரெப்ரியாக அர்ஜென்டினாவைச் சேர்ந்த Facunda Tello-வை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெப்பே பேசுகையில், “நான் இதைக் கண்டிப்பாக சொல்ல வேண்டும். அர்ஜென்டினா ரெப்ரி Facunda Tello எங்கள் ஆட்டத்தை கணித்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டாம் பாதியில் நாங்கள் எதுவும் விளையாடவில்லையா? நாங்கள் கடினமாகத்தான் உழைத்தோம். கால்பந்து ஆட்டத்தை நன்றாக விளையாடிய ஒரே அணி நாங்கள் மட்டுமே. தற்போது நாங்கள் மனவருதத்தில் உள்ளோம். உலகக்கோப்பையை வெல்லும் தகுதி எங்களிடம் இருந்தும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பேசிய, ப்ருனோ பெர்னாண்டஸ் “அர்ஜெண்டினாவிற்கு டிராபியை (trophy) கொடுக்கப் போகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது நடைப்பெற்ற போட்டியில் எங்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்பது மட்டும் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.