கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் திருமணஞ்சேரி பட்டத்திக்காடு என 2 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சிகளில் பொதுவாக அமைந்துள்ள மயிலாடி தெரு கிராமத்தில் ஒரு சிலர் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு அந்த கிராமத்தில் மயானம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த மயானத்திற்கு பாதை இல்லா காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மழை வெள்ளம் காலங்களில் திடீர் இறப்பு ஏற்படும் போது அந்த மயிலாடி தெரு வழியாக மயானத்திற்கு சடலங்களை எடுத்து வேண்டும். அப்போது அங்குள்ள நீர்நிலை பகுதியில் எடுத்து செல்லும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பாதை அமைத்து தர கோரி சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்த சூழ்நிலையில், அவரது உடலை மயானத்திற்கு தண்ணீரில் இறங்கி எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று மயானத்திற்கு செல்வதற்கு நிரந்தரமாக பாதை அமைத்து தர 2 ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் அரசுக்கும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.