வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோலாலம்பூர்: மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் அருகேயுள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோலாலம்பூர் வடக்கே 50 கி.மீ., தொலைவில், படாங் களி என்ற இடத்தில் இயற்கை விவசாய பண்ணை உள்ளது. இங்கு இன்று(டிச.,16) அதிகாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீ., உயரத்தில் இருந்து மண் சரிந்துள்ளது. இதனால், 3 கி.மீ., தூரம் அளவுக்கு மண் மூடியது. நிலச்சரிவு ஏற்பட்ட போது அந்த இடத்தில் 75 மலேஷியர்கள் இருந்துள்ளதாக தெரிகிறது.
அதில் 10 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மீட்கப்பட்டனர். 53 பேர் காயமின்றி தப்பிய நிலையில், நிலச்சிரவில் சிக்கிய 25 பேரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் 400 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மலேஷியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கென்டிங் ஹைலேண்ட் ஹில் ரிசார்ட் பகுதி அருகே, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி அமைந்துள்ளது. இதனால், அங்கு கூடாரம் அமைப்பதற்கும், இருக்கும் கூடாரங்களை வாடகைக்கு எடுக்கவும் வந்த போது, இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மலேஷியாவில், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பருவமழை பெய்வது வழக்கம். ஆனால், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னர், அந்த இடத்தில் மழை பெய்தது குறித்த எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement