அதிசயபுரம் கிராமத்தில் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரவில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான பெண்கள்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடியூரில் இயங்கி வரும் அரசு மதுப்பானக்கடையை அருகிலுள்ள அதிசயபுரம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாகவும், இரவில் புதிய மது கடைக்கு மது பாட்டில் கொண்டு வரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனை அடுத்து தங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அதிசயபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இரவு நேரத்தில் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீ.கே.புதூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் மதுக்கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.