ஈரோடு: ஈரோட்டில் ஒன்று மற்றும் இருபது ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் வாங்க மறுப்பதாக குறி மாவட்ட ஆட்சியர் இடம் அப்பணத்தை ஒப்படைக்கவந்த தேநீர் வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த மாணிக்கண்ணன் சைக்கிளில் தேநீர் வியாபாரம் செய்து வருகிறார். தேநீர் விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் அளித்து வந்த ஒன்று மற்றும் இருபது ரூபாய் நோட்டுக்கள், பத்து இருபது ரூபாய் நாணயங்களையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேகரித்து வந்துள்ளார் மாணிக்கண்ணன், அண்மையில் இப்பணத்தை காய்கறி சந்தை, பேருந்து, மளிகை கடைகளில், மாற்ற முயன்ற போது அதனை யாரும் வாங்க முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் வாங்கிய கடனை செலுத்துவதற்கு ஒரு ரூபாய் இருபது ரூபாய் நோட்டுக்களுடன் வங்கியை அணுகிய போது, வங்கி ஊழியர்கள் அலைக்கழித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணிக்கண்ணன் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அப்பணத்தை ஒப்படைக்க முயன்றார். இதன் இடையே மணிகண்ணனின் ஒப்புதலை பெற்று கொண்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக கூறி அவரை அனுப்பிவைத்தனர். அரசால் வெளியிடப்பட்ட நாணயங்களும் ரூபாய் நோட்டுக்களும் வாங்க மறுப்பார்கள் மீது இந்தியா தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதன் விழிப்புணர்வை அரசு வெளியிட வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.