உலககோப்பை வெற்றி கொண்டாட்டம்; கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் மோதல் 3 பேருக்கு அரிவாள் வெட்டு.! 2 போலீசார் காயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பொதுவாக கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இதில் அர்ஜென்டினாவுக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகம். உலக கோப்பை தொடங்கிய நாள் முதலே கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் அர்ஜென்டினா வீரரான மெஸ்சி, பிரேசில் வீரரான நெய்மர், போர்ச்சுக்கல் வீரரான ரொனால்டோ உள்பட வீரர்களின் கட் டவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. போட்டி தொடங்கியது முதல் பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் மூலம் விளையாட்டு போட்டிகள் காண்பிக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று இறுதி போட்டி என்பதால் கேரளா முழுவதும் ஏராளமான இடங்களில் எல்இடி ஸ்கிரீன் உள்பட திரைகளில் போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்தநிலையில் கண்ணூர், பள்ளியான்மூளை பகுதியில் பெரிய திரை வைக்கப்பட்டு ஏராளமான ரசிகர்கள் போட்டியை பார்த்து கொணடிருந்தனர். அர்ஜென்டினா வெற்றி பெற்றவுடன் அந்த அணி ரசிகர்கள் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

அப்ேபாது திடீரென ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஆதர்ஷ்(25) அனுராக்(26) மற்றும் விவேக்(24) ஆகிய 3பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஆதர்ஷ் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 3 பேரும் கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் தலச்சேரி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் மோதல் ஏற்பட்டது. இதில் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடந்த மோதலில் 2போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.