நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் வன பகுதியில் பூத்துக்குலுங்கும் வெள்ளைநிற சூரியகாந்தி பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு மாதம் மட்டுமே பூக்கும் காட்டு சூரியகாந்தி மலர்களில் தேனெடுக்க தேனீக்களும் படையெடுத்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், முதுமலை மற்றும் நடுவட்டம் வன பகுதிகளிலில் வாசனை திரவிய தாவரங்கள், மூலிகை செடிகள் மற்றும் குறிஞ்சி உள்ளிட்ட பல அறிய வகை மலை செடிகள் உள்ளன.
அந்த வகையில் வருடம் தோறும் பூக்கும் வெள்ளை நீர காட்சி அளிக்கக்கூடிய சூரியகாந்தி மலர்கள் தற்போது பூத்து குலுங்க தொடங்கியது, கூடலூரியில் இருந்து கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலையில் இருபுறமும் வெள்ளை போர்வையை போதியது போல பூத்து குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் புக்க தொடங்கும் இந்த வெள்ளை நிற காட்டு சூரியகாந்தி மலர்கள் ஜனவரியில் செடியிலையே அழிகிவிடும் தன்மை கொண்டவையாகும். ஒரு மாதமே பூத்து குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்களின் தேன் எடுக்க தேனீக்களும் படையெடுத்து வருகின்றன,