தன மீது தமிழக போலீசார் போடும் வழக்கு எல்லாம், எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல் என்று, தமிழக போலீசை கேலி செய்யும் வகையில் டிடிஎப் வாசன் பேசியுள்ளார்.
காவல்துறை பொய்யான காரணங்களை கூறி தன் ரசிகர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரபல பைக் ரைடர் & யூடிபர் டிடிஎப் வாசன், வழக்கு எல்லாம் எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல என்று கேலி செய்து பேசியுள்ளார்.
கடந்த வாரம் கடலூர், புதுப்பாளையம் பகுதியில் செந்தில் செல்வம் என்ற இயக்குநர் ஒருவரின் அலுவலக திறப்புக்கு யூடிபர் டிடிஎப்
வந்தார்.
அப்போது அவரை காண அவரின் தீவிர ரசிகர்களான பள்ளி சிறார்கள் முதல் கலோரி மாணவர்கள் வரை கூட்டமாக குவிந்தனர்.
இதனால் புதுப்பாளையம் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது போலீசார், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்காக கூறி கூட்டத்தின் மீது தடியடி நடத்தினர்.
போலீஸே என்ன ராஜமரியாதையோட உக்கார வைப்பாங்க,, வைப்பன் – ttf வாசன்
பாத்து செஞ்சு விடுங்க ஆபீசர் @chennaipolice_ @vijaypnpa_ipspic.twitter.com/iPhyDj2Np6
— 1848 (@18___48) December 19, 2022
மேலும், விதிமுறைகளில் மீறி செயல்பட்டதாக டிடிஎப் வாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள யூடிபர் டிடிஎப் வாசன், “தன் ரசிகர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தி, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் இந்த வழக்குப்பதிவெல்லாம் எனக்கு துணிக்கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல தான். எனக்கு நிச்சயம் ஒரு காலம் வரும்” என்று சுமார் 44 நிமிடம் பேசியுள்ளார்.