பிறக்கவிருக்கும் 2023 எப்படியிருக்கும்? பாபா வங்காவின் திகில் ஏற்படுத்தும் கணிப்பு


பால்கன் நாடுகளின் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பாபா வங்கா பிறக்கவிருக்கும் 2023 தொடர்பில் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரங்களை முன்னறிவித்த பாபா வங்கா

ரஷ்யரான பாபா வங்கா இதற்கு முன்னர் இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் அணுசக்தி பேரழிவு, 9/11 தாக்குதல்கள் மற்றும் அவரது சொந்த மரணம் உட்பட பல பயங்கரங்களை முன்னறிவித்திருந்தார்.

1996ல் அவர் மரணப்பட்ட நிலையிலும், 5079 வரையிலான நிகழ்வுகளை அவர் கணித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
அவரது கணிப்பின்படி 5079ல் உலகம் மொத்தமாக அழியும் என்றே கூறுகின்றனர்.

பிறக்கவிருக்கும் 2023 எப்படியிருக்கும்? பாபா வங்காவின் திகில் ஏற்படுத்தும் கணிப்பு | Baba Vanga Eerie 2023 Predications

@getty

2022 தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பில் இரண்டு நிறைவேறியதாகவே கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அவர் கணித்திருந்தார். அத்துடன் இத்தாலியில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்படும் எனவும் நீர் நிலைகள் வரண்டு போகும் எனவும் பாபா வங்கா கணித்திருந்தார்.

உயிரியல் ஆயுதம்

இந்த நிலையில் 2023 தொடர்பில் அவர் நான்கு கணிப்புகளை பதிவு செய்துள்ளார். அதில் உக்ரைனில் உயிரியல் ஆயுதம் பயன்படுத்தப்படும் எனவும், ரஷ்யா மட்டுமின்றி உலகின் பல முதன்மை நாடுகள் சோதனை முயற்சியாகவும் பாதுகாப்பு கருதியும் அதிக அளவில் பயன்படுத்தும் என அவர் கணித்துள்ளார்.

இன்னொன்று, 2023ல் பூமி பயங்கரமான சூரிய புயலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பாபா வங்கா பதிவு செய்துள்ளார்.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் இணையம் கூட அத்தகைய தாக்குதல் காரணமாக பெருமளவு பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறக்கவிருக்கும் 2023 எப்படியிருக்கும்? பாபா வங்காவின் திகில் ஏற்படுத்தும் கணிப்பு | Baba Vanga Eerie 2023 Predications

@getty

மூன்றாவதாக, 2023 முதல் இனி பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை ஆய்வகங்களில் வடிவமைத்துக் கொள்வார்கள் எனவும், தோல் நிறம் மற்றும் அவர்களின் பண்புகள் வரையில் முடிவு செய்வார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார்.

நான்காவதாக பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு மாற்றம் நிகழும், இது சுற்றுச்சூழலில் பேரழிவு தரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.