மேற்கு ரஷ்யாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயின் ஒருபகுதி வெடித்து சிதறியதில், மூன்று பேர் உயிரிழந்தனர்.
சுவஷியா பிராந்தியத்தில் உள்ள பைப்லைனில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றபோது தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் பாதிப்பு ஏதும் இல்லையென்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.