ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் ..! அணியின் முழு விவரம் ..!

கொச்சி,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது .

கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டது

இந்த ஏலத்தில் சென்னை அணி எடுத்த வீரர்கள் முழு விவரம்:

ரகானே:

இன்று நடைபெற்ற ஏலத்தில் முதல் வீரராக, இந்திய வீரர் ரகானேவை அடிப்படை தொகையான ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

பென் ஸ்டோக்ஸ் :

பின்னர் இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி எனும் தொகைக்கு ஏலத்தில் எடுத்தது .

ஷேக் ரஷீத்:

ஆந்திராவை சேர்ந்த 18 வயதான ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

நிஷாந்த் சிந்து:

ஹரியானவை சேர்ந்த நிஷாந்த் சிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இவரை இறுதியில் ரூ. 60 லட்சத்திற்கு சென்னை அணி சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

கைல் ஜேமிசன்:

நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை, அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அஜய் மண்டல்:

சத்திஸ்கரை சேர்ந்த ஆல்-ரவுண்டரான அஜய் மண்டல் என்பவரையும், ஐதராபாத்தை சேர்ந்த பகத் வர்மாவையும் ரூ.20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை அணி:

தோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.