பெங்களூரு, ‘ஓலா’ நிறுவனம், அதன் ‘மூவ் 3’ சாப்ட்வேர் அப்டேட்டை, ‘ஓலா எஸ் 1’ மாடல் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வெளியிட்டுள்ளது. இது, இந்நிறுவனத்தின் மூன்றாவது ‘ஓ.எஸ்., அப்டேட்’ ஆகும்.
இதன் வாயிலாக ஒரு லட்சம் இந்திய வாடிக்கையாளர்கள் பயன் பெற்றுள்ளனர் என்றும், இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் 50க்கும் மேற்பட்ட வசதி கள் கொண்ட ஸ்கூட்டராக ஓலா எஸ் 1 திகழ்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய சாப்ட்வேர் அப்டேட்டால், ஸ்மார்ட் போன் வாயிலாக வாகனத்தை பூட்டி, திறக்கும் வசதி, வைபை இணைப்பு, புளூடூத் வசதி என பல்வேறு டிஜிட்டல் அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளது.
அத்துடன், வெறும் 15 நிமிட ஹைப்பர் சார்ஜிங்கில் 50 கி.மீ., பயணம், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ஹில் ஹோல்டு அசிஸ்ட், பிக் அப் அதிகரிப்பு என ஸ்கூட்டரின் செயல்திறனையும் மேம்படுத்தியுள்ளது, ஓலா நிறுவனம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement