சுசூகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF வெற்றியை தொடர்ந்து சுசூகி ஜிக்ஸெர் 250 அல்லது GSX-R250 பைக் இந்தியாவில் வெளியாகயுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது.
ஜிக்ஸ்ர் 150 மற்றும் ஜிக்ஸெர் SF போலேவே மிக ஸ்டைலிசாக நேர்த்தியாக உள்ளது. GSX-R250 பைக்கின் என்ஜின் பற்றி விபரங்கள் வெளியாக வில்லை. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
முன் மற்றும் பின் புறங்களில் டிஸ்க் பிரேக்குகள் , ஸ்பிளிட் இருக்கைகள் , நேர்த்தியான பெட்ரோல் டேங்க் முழுதும் ஃபேரிங் செய்யப்பட்டுள்ள பைக்கின் உற்பத்தி மாடல் ஏதோ ஒரு தொழிற்சாலையில் வெளிநாட்டில் இந்த படங்கள் வெளியாகியுள்ளது.
GSX-R1000 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் GSX-R250 பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கன்சோல் , சுவிட்ச் கியர் போன்றவற்றை பெற்றுள்ளது. நில வண்ணத்தில் மிக சிறப்பாக காட்சியாளிக்கும் இந்த மாடல் சிபிஆர் 250ஆர் , நின்ஜா 300 போன்ற மாடல்களுக்கு சவாலாக விளங்கும்.
ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முக்கிய விபரங்கள் வெளியாகலாம்.
imagecredit:Toutiao.com