வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
மாயவரத்தில் படிப்பை முடித்து வேலை நிமித்தமாக சென்னைக்கு குடியேறி வாழ்க்கை நன்றாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது ஸ்ரீதர்க்கு. பெரிய கனவுகளை சுமந்து திரிந்த ஒரு சாதாரண மனிதன்தான் அவனும். அவனுடைய அப்பா ஒரு கிராம நிர்வாக அலுவலராக மாயவரத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் வேலை செய்தார். அவருக்கு எப்போதெல்லாம் பணி மாறுதல் கிடைக்கிறதோ, உடனே ஊர் மாற வேண்டியதுதான். அவன் பத்தாம் வகுப்பு வரைக்கும் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் வழி கல்வியில் படித்தான். பள்ளியில் படிக்கும்போதே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் .அப்பொழுதே நிறைய கவிதைகள் எழுத தொடங்கினான். பத்தாம் வகுப்பு முடித்ததும் பதினொன்றாம் வகுப்பு மாயவரத்தில் நல்ல பள்ளியில் சேர்ந்தான். அவனுக்காக அவனுடைய அப்பா பணி மாறுதல் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.
கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு மாயவரத்திலேயே சில வருடங்கள் சின்ன சின்ன வேலைகள் செய்தான். ஸ்ரீதர்க்கு ஒரு ஆசை மட்டும் இருந்துக் கொண்டே இருந்தது. அது சென்னைக்கு சென்று திரைப்பட கல்லூரியில் சேர்ந்து இயக்குனராக பயிற்சி எடுத்து, ஒரு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்பதுதான். அப்போதுதான் அவனுடைய அப்பாவுக்கு மின்சார விபத்து ஏற்பட்டு கைகள் பாதிக்கப்பட்டது. அவர் விருப்ப ஓய்வு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
மனதோடு அவனுடைய ஆசைகளுக்கு சமாதி அவனே கட்டிக் கொண்டு, சென்னையை நோக்கி நகர்ந்தான். வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்கிற சூழ்நிலையில், வேலைத்தேடி செல்ல தொடங்கினான். கவிதைகள் எழுதுவதை மட்டும் தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.
அப்போது அவனுடைய அலுவலகத்தில் ஆடிட் ஆரம்பித்தது. ஸ்ரீதர் அக்கௌன்டன்ட் பணியில் இருந்தான். அன்று முதல் நாள் ஆடிட்டர் மற்றும் அவருடைய உதவிக்கு ஆடிட்டிங் படிக்கும் ஒரு பெண்ணும் வந்தார்கள். அவனுடைய டீமுக்கு அறிமுகம் செய்தார்கள். அந்த பெண் ஸ்ரீதரிடம் வந்து “ஹாய் ஐ அம் ஜனனி” என்று கூற, ஸ்ரீதரும் அறிமுகம் செய்துக் கொண்டான் அது ஒரு ஃபார்மல் சந்திப்பாகவே இருந்ததது.
இரண்டாம் நாள் ஜனனி ஸ்ரீதரிடம் வேலை விஷயமாக பேச தொடங்கி பின்பு நான் விருகம்பாக்கத்தில் இருந்து வருகிறேன், நீங்கள் எங்கிருந்து வரீங்க என்று கேட்டாள். ஸ்ரீதர் நான் ஆதம்பாக்கத்தில் இருந்து வருகிறேன் என்றான். வேலை செய்துக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் இருவரும் நன்றாகவே பழக தொடங்கினார்கள். ஜனனி அவளுக்கு பிடித்த பிடிக்காத விஷயங்கள் பகிர, ஸ்ரீதரும் பகிர்ந்து கொண்டான்.
கவிதைகள் எழுத பிடிக்கும், நிறைய கவிதைகள் எழுதுவேன் என்று சொன்னான். ஜனனி கவிதை எனக்கும் பிடிக்கும் என்றாள். பின்பு அவன் எழுதிய சில கவிதைகளை சொல்ல சொல்லி ரசித்தாள். வேலையோடு சேர்ந்து கவிதைகளும் ஆடிட் செய்யப்பட்டது. இப்படியே ஒருவாரம் சென்றது ஒருநாள் ஜனனி வரவில்லை. அப்போது ஸ்ரீதருக்கு அன்று முழுநாளும் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஜனனி ஏன் இன்று வரவில்லை என்றே யோசித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கு புரிந்தது ஜனனியை அவனுக்கு பிடித்திருந்தது.
அடுத்த நாள் ஜனனியை பார்த்த பின்புதான் ஸ்ரீதருக்கு முகத்தில் சிரிப்பே வந்தது. ஜனனி ஸ்ரீதரிடன் வந்து எனக்கு நேற்று உடம்பு சரியில்லை, அதனால் லீவ் போட்டுவிட்டேன் என்றாள். ஸ்ரீதருக்கு காய்ச்சல் வந்தது போல அவனுக்குள் ஒரு கஷ்டம், வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. ஓ அப்படியா இப்போது பரவாயில்லையா என்று சாதாரணமாக கேட்பது போல கேட்டான்.
அப்போது ஜனனி சொன்னாள் நாளையுடன் ஆடிட் முடியப்போகிறது. நாளைத்தான் கடைசிநாள், நான் ஒன்று கேட்பேன் நீங்கள் என்னை பற்றி ஒரு கவிதை எழுதித்தர முடியுமா என்றாள். ஸ்ரீதருக்கு நாளையுடன் அவளை பார்க்க முடியாதே என்ற வருத்தம் ஒரு புறம் ,அவளை பற்றி கவிதை கேட்கிறாளே என்ற மகிழ்ச்சி ஒரு புறம்.
“ஒகே எழுதி தருகிறேன்” என்று சொன்னான். ஜனனிக்கு ஸ்ரீதர் மேலே ஏதோ ஒன்று இருந்தது. அவன் உடனே மதிய உணவு எடுத்துக் கொண்டு இடைவேளை நேரத்தில் எழுத தொடங்கினான். கவிதை முடிக்கும்போது அவனே அறியாமல் அவன் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் கீழே விழுந்தது. அது கண்ணீர் துளிகள் அல்ல, அவன் உயிர் உருகி ஜனனிக்காக சிந்தியது.
மாலை நேரம் ஜனனியிடம் கவிதையை மடித்து இதை வீட்டில் போய் படித்துவிட்டு நாளைக்கு வந்து என்னிடம் உன்னுடைய கருத்தை சொல் என்று கொடுத்தான். அவனுக்கு அது காதல் கடிதம் போலத்தான் இருந்தது ஜனனியும் சரி என்று வாங்கி வைத்துக்கொண்டாள் புன்சிரிப்போடு. அவளுக்கும் புரியாமல் இருக்குமா.
அன்று இரவு முழுவதும் ஸ்ரீதருக்கு தூக்கமே வரவில்லை. நாளைக்கு அந்த கவிதையை படித்துவிட்டு என்ன சொல்ல போகிறாள் என்று அவனுக்குள்ளே ஒருவித தவிப்பு. அடுத்தநாள் காலை ஜனனி வந்தாள். எப்போதும் போல குட் மார்னிங் சொன்னாள், எப்போதும்போல ஸ்ரீதரிடம் பேசினாள். கவிதையை பற்றி பேசவேயில்லை. ஸ்ரீதர் கேட்டான் ஜனனியிடம் கவிதையை படித்தாயா என்று. அதற்கு ஜனனி படித்தேன் அருமையாக இருந்தது. இருந்தது.
மாலை வந்தது எல்லோரிடமும் ஆடிட் இன்றுடன் முடிந்துவிட்டது நாங்கள் விடைபெறுகிறோம் என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள்.ஸ்ரீதரிடமும் வந்து ஜனனி சொன்னாள். உன்னை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீ ஒரு பெரிய கவிஞனாக வர வேண்டும்.. என்னை பற்றி நீ எழுதிய கவிதையில் என்னையே மறந்துவிட்டேன். நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம். நீ என்ன நினைத்து எழுதி இருப்பாய் என்று எனக்கு தெரியும்.ஆனால் இப்போது விடைபெறும் நேரம் “டாடா பை” என்றாள்.
ஜனனி கண்களிலும் உயிர் உருகி கண்ணீர் துளிகளாய் வருவதை பார்த்துக்கொண்டே நின்றான் ஸ்ரீதர். அதற்கு பிறகு ஜனனியை சந்திக்கவேயில்லை. ஸ்ரீதருக்கு திருமணம் முடித்து பலவருடங்கள் கழித்து ஒரு பெரிய மாலில் மனைவியுடன் ஸ்ரீதர் போய்க்கொண்டிரும்போது, ஸ்ரீதர் என்று ஒரு குரல் கேட்டது. ஸ்ரீதர் திரும்பினான். ஜனனி நின்றுகொண்டிருந்தாள். எப்படி இருக்கிறாய் என்றான். மனைவியை அறிமுகம் செய்து வைத்தான். ஜனனி நன்றாக இருக்கிறேன், உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி.
எவ்வளவு வருடங்கள் ஓடிவிட்டது என்றாள். அப்போது அவளுடைய அலைபேசியை எடுத்து ஏதோ ஒன்றை காண்பித்தாள் ஸ்ரீதரிடம். அது அவன் ஜனனிக்கு கொடுத்த கவிதை. ஜனனி அதனை பொக்கிஷமாக படம் எடுத்து அலைபேசியில் பாதுகாத்து வைத்திருந்தாள்.
குடும்ப சூழ்நிலை காரணமாக ,ஜனனியின் அப்பா அவர் செய்த பிசினஸ் நஷ்டம் அடைந்ததால், ஜனனியை கடன்கொடுத்த அவர் நண்பனின் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். ஜனனிக்கு இந்த விஷயம் நாங்கள் ஆஃபீசியில் சந்தித்த கடைசி நாள் காலையில் அவர் அப்பா ஜனனியிடன் சொல்லி இருக்கிறார்.. நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவளை கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஜனனி வெளியே காட்டிக்கொள்ளாமல் கடைசி நாளில் என்னிடம் பேசிவிட்டு “டாடா பை” என்று சொல்லிவிட்டு சென்றாள் என்று என் நண்பன் என்னிடம் பிறகு ஒருநாள் சொன்னான்.
இப்போது ஜனனி கையில் அவளுடைய பெண் குழந்தை என்னிடம் சொன்னது “டாடா பை அங்கிள் என்று”. ஜனனியின் அதே குரலை மறுபடியும் கேட்டதுபோல உணர்ந்தேன். கனத்த இதயத்துடன் கடந்தேன் அந்த இடத்தை விட்டு……
“டாடா பை”
-ஸ்ரீராம் பாலமோகன்
ஆதம்பாக்கம் சென்னை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.