திடீர் மரணம்… திருப்பதி தேவஸ்தானத்தில் அதிரடி மாற்றம்… தர்மா ரெட்டிக்கு பதில் இவர்தான்!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில், அதனை சார்ந்து இயங்கும் கோயில்கள், அதன் சொத்துகள் ஆகியவற்றை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதற்கு பல்வேறு படிநிலைகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக ஒய்.வி.சுப்பா ரெட்டி பதவி வகித்து வருகிறார்.

தேவஸ்தான அறங்காவலர் குழு

இதையடுத்து அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ஏ.வி.தர்மா ரெட்டி, போகலா அசோக் குமார், மல்லாடி கிருஷ்ணா ராவ், தங்குதுரு மாருதி பிரசாத், மன்னே ஜீவன் ரெட்டி என மொத்தம் 27 பேர் இருக்கின்றனர். இதில் தேவஸ்தான செயல் அதிகாரியாக ஏ.வி.தர்மா ரெட்டி கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய மகன் சந்திரமவுலி ரெட்டிக்கு (27) சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

டிசம்பர் 23 முதல்… அவசர ஆபரேஷனுக்கு ரெடியாகும் இந்தியா… இது கொரோனா அலர்ட்!

தர்மா ரெட்டி மகன் திருமணம்

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் திடீரென சந்திரமவுலி ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எதிர்பாராத மரணம்

அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 21ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி சந்திரமவுலி ரெட்டி உயிரிழந்தார். இது ஏ.வி.தர்மா ரெட்டியின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து ஆந்திர மாநில அரசு தர்மா ரெட்டிக்கு 12 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. எனவே தற்காலிகமாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக ஒருவரை நியமிக்க ஆந்திர அரசு திட்டமிட்டது.

அனில் குமார் சிங்கால் நியமனம்

அதன்படி மாநில வருவாய் துறையின் முதன்மை செயலாளராக பணிபுரிந்து வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் சிங்காலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியானதை அடுத்து, திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சென்று அனில் சிங்கால் சாமி தரிசனம் செய்தார்.

முறைப்படி பொறுப்பேற்றார்

அதன்பிறகு முறைப்படி தேவஸ்தான செயல் அதிகாரிக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதுதொடர்பாக நிகழ்வு பங்காரு வகாலி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தேவஸ்தானத்தின் இணை செயல் அதிகாரிகள் வி.வீரபிரமம், சதா பார்கவி, தலைமை சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

யாத்திரையை நிறுத்த சாக்குபோக்குகள் சொல்லப்படுகின்றன; ராகுல்காந்தி பதிலடி.!

சுப்பா ரெட்டி உடன் சந்திப்பு

இதன் தொடர்ச்சியாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியை திருமலையில் உள்ள கேம்ப் அலுவலகத்தை சந்தித்தார். அப்போது வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெறவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. வரும் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட ஏகாதசி நிகழ்வை ஒட்டி சொர்க்க வாசல் திறக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி

இந்த வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்படும். இதற்காக சிறப்பு டிக்கெட் வாங்க வேண்டியது அவசியம். இதையொட்டி செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.