சென்னை,:இந்தியாவின் பேட்டரி செல் தயாரிப்பு நிறுவனமான ‘காடி இந்தியா’ 5.2 ஆம்பியர் மற்றும் 275 வாட் ஆற்றல் அடர்த்தி கொண்ட, ‘21700’ மாடல் லித்தியம் அயான் பேட்டரி செல்களை முதல் முறையாக தயாரித்து உள்ளது.
இந்த செல்கள் ‘சிலிக்கான் ஆனோடு’ தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இது மின்சார வாகனங்களின் ரேஞ்சை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காடி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான மகேஷ் காடி கூறியதாவது:
ஹைதராபாத் ஆலையில் தயாரிக்கப்படும் லித்தியம் அயான் பேட்டரி செல்கள், ‘இன் ஹவுஸ்’ தொழில்நுட்பத்தின் வாயிலாக உருவாக்கப்படுகின்றன.
தற்போது 5 ஆம்பியர் பேட்டரி செல்களை வினியோகம் செய்து வருகிறோம். மின்சார வாகனங்களின் தேவைகள் அதிகரிப்பதால், 5.2 ஆம்பியர் பேட்டரி செல்களை மிக விரைவில் வினியோகிக்க துவங்குவோம்.
மேலும், 5.6 ஆம்பியர்களுக்கும் அதிகமான பேட்டரி செல்களை தயாரிப்பதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement