இன்றைய நவீன உலகில் பலர் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகளை போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர். இருப்பினும் இவை நிரந்தமாக உடல் எடையை குறைக்க உதவாது.
இதற்கு ஒரு சில இயற்கை வழிகளும் உள்ளன. நீங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் பூசணி சாற்றை சேர்க்கலாம்.
வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பூசணி சாற்றில் போதுமான அளவில் காணப்படுகின்றன.
அந்தவகையில் பூசணி சாறுடன் எப்படி உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
தயாரிப்பது எப்படி?
- பழுத்த பூசணிக்காயை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.
- இப்போது இந்த துண்டுகளிலிருந்து தோல்களை அகற்றவும்.இதற்குப் பிறகு, அவற்றை வேக வைக்கவும்.
- வெந்த பிறகு, அதை நன்றாக அரைத்து, ஆப்பிள் துண்டுகளை அதனுடன் சேர்த்து அரைக்கவும்.
- இப்போது நன்றாகக் கலந்து அதிலிருந்து சாற்றினை வடிகட்டிக் கொள்ளவும். இந்த சாற்றை தினமும் உட்கொள்ளுங்கள்.
நன்மைகள்
- பூசணி சாறு குடிப்பது உங்கள் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்.இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
- மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. அதே சமயம் உங்கள் செரிமானம் நன்றாக இருந்தால் எடையை குறைப்பதில் பல நன்மைகள் கிடைக்கும்.
- பூசணி சாற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, அதை உட்கொள்வது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதில் நன்மை பயக்கும்.
- வீக்கத்தைக் குறைப்பதிலும் இது நன்மை பயக்கும்.